திருக்குறள்

1185.

உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென் மேனி பசப்பூர் வது.

திருக்குறள் 1185

உவக்காணெம் காதலர் செல்வார் இவக்காணென் மேனி பசப்பூர் வது.

பொருள்:

என்னைப் பிரிந்து காதலர் சிறிது தொலைவுகூடச் செல்லவில்லை; அதற்குள்ளாக என் மேனியில் படர்ந்து விட்டதே பசலை நிறம்.

மு.வரததாசனார் உரை:

அதோ பார்! எம்முடைய காதலர் பிரிந்து செல்கின்றார்; இதோ பார்! என்னுடைய மேனியில் பசலை நிறம் வந்து படர்கிறது.

சாலமன் பாப்பையா உரை:

முன்பும்கூட, அந்தப் பக்கம் என் அன்பர் போயிருப்பார்; இந்தப் பக்கம் என் மேனி பசலை கொண்டு விடும். முன்பே அப்படி என்றால் இப்போது எப்படி இருக்கும்?.